தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் கேப்டனுக்கு விளக்கமறியல்!
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் கிரேக்க நாட்டு கேப்டனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அவரை இன்று (திங்கட்கிழமை) முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் குறித்த கெப்டனை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே, கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இன்றைய தினம் குறித்த கெப்டனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பியிருந்தார்.
தீயைக் கட்டுப்படுத்த தானியங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறியமை மற்றும் தீ பரவல் குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த கேப்டனுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.