பறவைகள் திடீரென எச்சமிட்டு உணர்த்தும் ஆபத்துக்கள்? உண்மையில் சாஸ்த்திரம் என்ன சொல்கிறது...

பறவைகள் திடீரென எச்சமிட்டு உணர்த்தும் ஆபத்துக்கள்? உண்மையில் சாஸ்த்திரம் என்ன சொல்கிறது...

வ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு என்பார்கள். அதில் குறிப்பாக ஒரு சில பறவைகள் மனிதனுக்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே உணர்த்தக் கூடிய ஆற்றல் இருப்பதாக சாஸ்த்திரம் கூறுகின்றது.

அதில் காகங்கள் நமக்கு உணர்த்தும் அறிகுறிகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது. இந்து சாஸ்திரத்தைப் பொறுத்தவரை காகங்கள் பித்ரு தர்மத்திற்கு உதாரணமாக காலகாலமாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? பறவைகள் உங்கள் மீது எச்சம் இட்டால் நல்லதா? கெட்டதா? பறவைகள் வீட்டிற்குள் வருவது ஆபத்தை உணர்த்துகிறதா? என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகின்றது. சாஸ்திர முறைமைகளையும் பாரம்பரியத்தை நம்புகின்றவர்களுக்கும் இது பயனுள்ளதாகவே அமைகின்றது.

நம் உயிரை எடுப்பது சனீஸ்வர பகவானின் கடமையாக இருக்கிறது. அவருடைய வாகனமாக இருக்கும் காக்கைக்கு மட்டும் தான் அனைத்து விதமான உணவுகளையும் உண்ணும் வரம் கிடைத்துள்ளது.

காக்கை அசைவம் உண்ணும், சைவமும் உண்ணும். அது போல் சமைத்த உணவுகளாக இருந்தாலும், சமைக்காத உணவுகளாக இருந்தாலும், தானியங்கள், பழங்கள் என்று எல்லா வகையான உணவுகளையும் காக்கை சாப்பிடும். இறந்த நம் முன்னோர்கள் எதை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

அந்த உணவை காக்கைக்கு நீங்கள் வைத்தால் காக்கை எதுவாயினும் சாப்பிடும் என்பதால் தான் காக்கை பித்ரு பூஜையில் தனித் தன்மை பெறுகிறது.

திடீரென நம் மீது காக்கை எச்சம் இடுவது, தலையில் தட்டுவது, கொத்தி விட்டு போவது போன்ற விஷயங்கள் நமக்கு நன்மை செய்யவே காக்கை அவ்வாறு செய்கிறது.

நம் முன்னோர்களின் ரூபமாக காக்கை இருப்பதால் காக்கை மூலம் நமக்கு எந்த கெடுதியும் ஏற்படாது. நமக்கு வர இருக்கும் சில ஆபத்துக்களை உணர்த்துவதற்காகவே காக்கை அவ்வாறு செய்கிறது என்று சாஸ்திரம் கூறுகிறது.

நாம் அவசரமாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென காக்கை எச்சம் இட்டால் நாம் ஏதோ ஒரு ஆபத்து சந்திக்க இருக்கிறோம் அதை தடுத்து நிறுத்துவதற்காக இவ்வாறு செய்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அதை கழுவி சுத்தம் செய்யும் அந்த சில நிமிடங்கள் உங்களது ஆபத்து நீங்கி விடுகிறது. விபத்து அல்லது ஒரு சில பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கு காக்கை முன்னெச்சரிக்கை செய்வதாக நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

காக்கை உங்களை தலையில் தட்டினால் அல்லது கொத்தினால் அருகில் எங்காவது கூடுகட்டி இருக்கிறதா? என்று பாருங்கள். கூட்டில் இருக்கும் தன் குஞ்சுகளை உங்களிடம் இருந்து பாதுகாக்க அவ்வாறு செய்யலாம். அப்படி இல்லாமல் இது போல் செய்தால் உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை உணர்த்துகிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காக்கை தலையில் தட்டினால் அல்லது கொத்தினால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு அதன் பின் வெளியில் செல்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும் ஒருவரையும் விடாமல் ஒரு காக்கை அடிக்கடி கொத்துகிறது என்றால் உடனே உங்களது குடும்ப ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் காண்பித்து பரிகாரம் செய்து கொள்ளுங்கள்.

இதனால் உங்கள் வீட்டில் ஏற்படவிருக்கும் திடீர் மரணங்கள் தடுக்கப்படும். உங்கள் வீட்டில் காக்கை தவிர மற்ற பறவைகள் எதுவாக இருந்தாலும் திக்கு தெரியாமல் தீடீரென வந்து விட்டால் அதுவும் உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை தான் குறிக்கிறது.

அந்த வீட்டில் ஏதாவது ஒரு துர் சம்பவங்கள் நிகழ இருப்பதை இது உணர்த்துகிறது. வீட்டிற்குள் வந்த அந்த பறவை வெள்ளையாக இருந்தால் உங்களுக்கு நல்லது நடக்கும். மற்ற அடர் நிறங்களில் இருந்தால் வீட்டை சுற்றி தீய சக்திகள் இருப்பதையே அது குறிக்கிறது.

இதற்கு பரிகாரங்கள் செய்து விட்டால் பிரச்சினைகள் இருக்காது. இது போல் பறவைகள் மூலம் உங்களுக்கு ஏதாவது வித்தியாசமான நிகழ்வுகள் நடந்தால் அது நல்லதுக்குத் தான் என்று எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பயப்பட ஒன்றும் இல்லை.

ஒரு ஐந்து நிமிடம் எங்காவது அமர்ந்து தண்ணீர் அருந்திவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். இதனால் உங்களுக்கு வர இருக்கும் ஆபத்து நீங்கும். பறவைகள் மட்டுமல்ல சில சமயங்களில் விலங்குகளும் இவற்றை நமக்கு உணர்த்தும். பறவை, விலங்குகளுக்கு தண்ணீர் அளியுங்கள் நல்லது நடக்கும் என்பது நிதர்சனமே!