இரத்தினபுரியில் கொடூரம்! தமிழ் மாணவி கழுத்து நெரித்து கொலை

இரத்தினபுரியில் கொடூரம்! தமிழ் மாணவி கழுத்து நெரித்து கொலை

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட - பின்னவத்த பிரதேசத்தில் தமிழ் மாணவி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாணவியின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது குறித்த மாணவி தனிமையில் இருந்துள்ளதுடன், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொட வைத்தியசாலையில் சுமார் ஐந்து மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.