வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்த அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு
2015 தொடக்கம் 2019 வரையிலான காலப்பகுதயில் இலங்கை தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவின் அறிக்கையானது நேற்றைய தினம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், குறித்த அறிக்கையானது மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.