இன்றைய ராசி பலன்கள் 24/09/2020

இன்றைய ராசி பலன்கள் 24/09/2020

மேஷம்

தொழில் வளம் மேலோங்கும் நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும்.

ரிஷபம்

ஆதாயம் அளவாக கிடைக்கும் நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவைக்காட்டிலும் செலவு கூடும்.

மிதுனம்

உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். திருமணத் தடைஅகலும்

கடகம்

வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல் நலத்தை சீராக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

சிம்மம்

தடைகள் அகலத் தைரியமாக முடிவெடுக்கும் நாள். கனிவாகப் பேசிக்காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கை துணை வழியேவந்த பிரச்சினை அகலும். அரசியல் ஈடுபாட்டால் அனுகூலம் உண்டு.

கன்னி

நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்

உடன்பிறப்புகளால் கடன்சுமை குறையும் நாள். வீடுமாற்றம், இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டு.

விருச்சகம்

வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பெற்றோர்களின் பாச மழையில் நனைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

தனுசு

வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். அரை குறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்.

மகரம்

வருமானம் திருப்தி தரும் நாள். இருப்பினும் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க விரயம் ஏற்படும். அயல்நாட்டில் இருந்து வரும் தகவல் அனுகூலமானதாக இருக்கும்.

கும்பம்

செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்னசொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். வெளி வட்டார பழக்கம் விரிவடையும். பயணம் பலன்தரும்.

மீனம்

சுபவிரயம் ஏற்படும் நாள். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். வரும் தொலைபேசி வழித்தகவல் வருமானம் தரக்கூடியதாக இருக்கும்.