நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்ட நடைமுறை குறித்து அமைச்சரவை அனுமதி!

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்ட நடைமுறை குறித்து அமைச்சரவை அனுமதி!

நாட்டில் ஐந்து மிகப் பெரிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஹெம்மாத்தகமை நீர்வழங்கல் திட்டம், ருவான்வெல்ல நீர்வழங்கல் திட்டம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர்வழங்கல் திட்டம், இரத்மலானை அல்லது மொறட்டுவை கழிவுநீர் அகற்றலுக்கான திட்டம் மற்றும் களுகங்கை நீர்வழங்கல் விரிவுபடுத்தும் திடடம் ஆகிய ஐந்து பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டங்களுக்கு வரி நிவாரணங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.