முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையானார்.

இன்று முற்பகல் 10.10 அளவில் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னிலையாகினார்.

ஆணைக்குழுவில் முன்னதாக சாட்சியம் வழங்கியிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, ஏப்ரல் 21 தாக்குதலுக்கான முழுமையான பொறுப்பினை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தரவை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியிருந்ததாக குறிப்பிட்டார்.

அதேநேரம், தாக்குதலுக்கான பொறுப்பினை ஏற்றால் ஏதாவதொரு நாட்டின் தூதுவராக நியமிப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையொன்றில் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுமானால் அது குறித்து ஆணைக்குழுவில் முன்னிலையாகி விளக்கமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்றைய தினம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று பிரசன்னமாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் 6ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் குறித்த ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று பிரசன்னமாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

மேலும், ஒக்டோபர் 6ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் குறித்த ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று பிரசன்னமாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.