மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகளவான முறைப்பாடுகள்!

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதிகளவான முறைப்பாடுகள்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 74 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.