இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்பனை!

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்பனை!

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தநிலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தொடருமென தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என்ற அச்சதிலே பொது மக்கள் இவ்வாறு  வாகனங்களை கொள்வனவு செய்வதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போது நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 10 வீதத்திற்கும் குறைவான வாகனங்களே எஞ்சியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வாகனங்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும்  குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மாத்திரமே தற்போது சந்தையில் கிடைக்கப்பெறுவதாகவும் வாகன இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.