
தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பும் மேலும் 47 பேர்
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 47 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 43,612 பேர் இதுவரையில் வீடு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, 5,922 பேர் முப்படையினரால் பராமரிக்கப்படும் 65 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025