கோர விபத்தில் 7 மாத ஆண் குழந்தை பலி!

கோர விபத்தில் 7 மாத ஆண் குழந்தை பலி!

புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஏற்பட்ட வீதி விபத்தில் 7 மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் அனர்த்தம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சிறிய ரக கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பெற்றோர்களுடன் பயணித்த 7மாத ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

மேலும் குழந்தையின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இவ் விபத்தின்போது மதுரங்குளி கணமூலை மிஹ்ராஜ்புரத்தைச் சேர்ந்த முஹம்மது பாசில் முஹம்மது பாஹிர் (7மாதம்) என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் தலைமையக பொலிஸார் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.