
காணி இல்லா பிரச்சினையா...?இதோ ஜனாதிபதியிடம் இருந்து ஓர் நற்செய்தி
தன்னுடைய மேற்பார்வையின் படி நாட்டில் உள்ள பிரதான பிரசிசனை மக்கள் வேலை செய்யாததே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் துறைகளின் மெதுவான செயல்திறன் வருந்தத்தக்கது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்
அத்துடன், எதிர்வரும் காலங்களில் கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதேபோல்,நடுத்தர வர்க்கத்தின் வருமானத்திற்கு ஏற்ற குடியிருப்புகளை நிர்மாணிக்க தேவையான நிலங்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டியாட்டியுள்ளார்.