நாடாளுமன்றத்திற்கருகில் வெட்டுக்காயங்களுடன் சடலம்!
நாடாளுமன்ற வீதியின், பொல்துவ பாலத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளது.
பொரள்ள - கொட்டாவ வீதியின் தியத உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ பாலத்தின் கீழ் நீரில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும், சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயது மதிக்கத்ததக்கவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.