
காய்கறிகள் மற்றும் மீன்களின் விலையில் அதிகரிப்பு…!
பீன்ஸ், கரட், தக்காளி, சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம், உலர்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளன.
அதே நேரத்தில் கெலவல்ல, தலபத், பலயா, சலயா ஆகிய மீன் வகைகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகளும் அதிகரித்து வருகின்றன என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல வகையான காய்கறிகள் மற்றும் மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஏனெனில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வழம் குறைந்து வருவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிலையங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாதகமான வானிலை காரணமாக தம்புள்ளை மற்றும் பெட்டா பொருளாதார நிலையங்களில் காய்கறி விலை அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் நாரஹேன்பிட்ட பொருளாதார நிலையத்தில் விலைகள் சற்று குறைந்துள்ளன.
ஒரு கிலோ கரட், பீன்ஸ், தக்காளி, பெரிய வெங்காயம் மற்றும் உலர்ந்த மிளகாய் ஆகியவற்றின் சில்லறை விலைகள் முறையே 270, 170 140, 180 மற்றும் 450 ஆகும், மேலே குறிப்பிட்டுள்ள 1 கிலோ காய்கறிகளின் சில்லறை விலை கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை 243, 158, 115,148 மற்றும் 420 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மீன்களின் விலை அதிகரித்துள்ளன. குறிப்பாக கெலவல்ல, தலபத், பலயா, சலயா ஆகிய மீன் வகைகளின் 1 கிலோவின் சில்லறை விலைகள் முறையே 950, 1,050, 480 மற்றும் 220 என பதிவாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது குறைந்த மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சாதகமற்ற வானிலை காரணமாக, பேலியகொட மற்றும் நாரஹேன்பிட்ட சந்தைகளில் பெரும்பாலான மீன் வகைகளின் விலை அதிகரித்துள்ளது, சில மீன் வகைகள் நீர்கொழும்பு சந்தையில் கிடைக்கவில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.