தேயிலைத் துறையை மீள் கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம்
கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ள தேயிலை உற்பத்தித் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பல வழிகளில் செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் வைத்தே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நிறுவன தோட்ட சீர்த்திருத்தங்கள், தேயிலை பயிர் செய்கை, தேயிலை தொழிற்சாலைகள் நவீனமயமாக்கல் மற்றும் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அவதானத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
தொழில்துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த காரணிகளை அடையாளம் கண்டு, உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான அதிக தேவையை மீண்டும் பெறுவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.