அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு!
பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க மூன்று மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளதென உள்நாட்டு அலுவல்கள், பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் கிறிஸ்டி லால் பிரனாந்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனர்த்தம் சம்பந்தமாக பொது மக்கள் தகவல்களை அறிவிப்பதற்கு 117 என்ற விசேட தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்தம் இடம்பெறுமாயின் அது குறித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச செயலக மட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.