கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் சில பகுதிகளில் இன்று (02) புதன்கிழமை பகல் 01 மணிமுதல் 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட இருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (03) காலை ஏழு மணிவரை அமுலில் இருக்கும்.

கொழும்பு 01, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் அழுத்தத்தினுடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழாய்களில் திருத்த வேலை மேற்கொள்ளப்பட இருப்பதால் நீர் வெட்டு அமுல்செய்யப்பட இருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவிக்கின்றது.