ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் தனிப்பட்ட நிகழ்வுகளுக்காக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ பணிகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளித்துள்ளதால், எதிர்காலத்தில் அவர் தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.