பம்பலபிடிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது
பம்பலபிடிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரவிக்கப்பட்டு நீர்கொழும்பு-ஏத்துகால பகுதியில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு காவல்துறையினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்த 27 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 21 கிராம் ஹெரோயின் மற்றும் 36 ஆயிரம் ரூபா பணமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.