புதிய அமைச்சர்கள் 70 பேர் போட்டுள்ள விண்ணப்பம்

புதிய அமைச்சர்கள் 70 பேர் போட்டுள்ள விண்ணப்பம்

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 70 பேர் தமக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு இந்த தகவலை தெரிவித்துள்ளது.

ஆனால் 30 உத்தியோகபூர்வ இல்லங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 70 விண்ணப்பதாரர்களின் தேவை மற்றும் தூரம் ஆகிய விடயங்களின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.