கொழும்பில் உள்ள காணிகளின் பெறுமதி அதிகரிப்பு
கொழும்பு மாவட்ட நில மதிப்பீட்டு குறியீட்டுக்கு அமைய வருடத்தின் முதல் அரையாண்டில் நிலங்களின் மதிப்பானது நூற்றுக்கு 7.1 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆண்டின் முதல் அரையாண்டில் நில மதிப்பீட்டு குறியீடு 141.6 ஆக பதிவாகியுள்ளது.
இது இந்தாண்டின் இரண்டு சதவீத வளர்ச்சியாகும். குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்துறை நில மதிப்பீட்டு குறியீட்டில் மிக ஆண்டின் உயர்ந்த வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாகவும், குடியிருப்பு மற்றும் வணிக நில மதிப்பீட்டு குறியீடு 7.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.