அதிகளவான பயணிகளுடன் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தின் ஊடாக ஒரே முறையில் ஆகக்கூடிய சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரக்கூடிய வகையில் அபிவிருத்தி நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுற்றுலா தொழில் துறைக்காக இதுவரையில் பயன்படுத்தப்படாத மற்றும் சுற்றுலா தொழில்துறையைக் கவரக்கூடிய 2,600 இடங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களைத் திறந்து சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரும் சந்தர்ப்பத்தில் இந்த 2,600 சுற்றுலா இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
கட்டுநாயக்க பண்டார நாயக்க விமானத்தின் மூலம் ஒரே முறையில் ஆகக்கூடிய சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரக்கூடிய வகையில் அபிவிருத்தி நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.