அதிகாலையில் திடீரென பற்றிய தீ! மர ஆலை எரிந்து நாசம்

அதிகாலையில் திடீரென பற்றிய தீ! மர ஆலை எரிந்து நாசம்

மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள மர ஆலையொன்றில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பரவலிற்காரன காரணம் இதுவரை அறியப்படவில்லை. இருப்பினும் ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.