அமைச்சரவையில் முன்வைக்கவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை

அமைச்சரவையில் முன்வைக்கவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்க்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையை, அமைச்சரவையின் அனுமதிக்காக முன்வைக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அமைச்சரவையில் முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் நேற்று அமைச்சில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது தற்போது வரைவுக்கு உட்படுத்தப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததை அடுத்து, உடனடியாக இரு தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டு, பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ள நிலையில், அதுதொடர்பில் இந்த புரிந்துணவு உடன்படிக்கை தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.