கதிர்வீச்சு சிகிச்சையினை பெற முடியவில்லை - குற்றச்சாட்டு
மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளர்கள் கதிர்வீச்சு சிகிச்சையைப் பெறுவதில் சில பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக நோயாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கதிர்வீச்சு சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியாமல் பல நாட்களாக மருத்துவமனையினை அண்மித்த பகுதிகளில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக அவர்கள் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.
இது குறித்து எமது செய்தி பிரிவு அபேக்ஷா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் வசந்த திசாநாயக்கை தொடர்பு கொண்டு வினவியது.
குறித்த கதிர்வீச்சு இயந்திரம் புதுபிப்பு நடவடடிக்கை காரணமாக இவ்வாறு நோயாளர்கள் இப் பிரச்சினையினை எதிர்நோக்கியுள்ளதாக அவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.