கல்வி அமைச்சின் விசேட செய்தி..

கல்வி அமைச்சின் விசேட செய்தி..

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தரம் 6 முதல் தரம் 13 வரையிலான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய, காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் பாடசாலை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் கனிஷ்ட பிரிவுகளுக்கான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை, கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடத்தின் 3ஆம், 4ஆம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி வளாக பிரதிப் பதிவாளர் ஞானபாஸ்கரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கிளிநொச்சி வளாகத்தின் விவசாய பீடத்தின் முதலாம், நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தநிலையில், விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள விவசாய பீட மாணவர்கள் எதிர்வரும் முதலாம் திகதியே விடுதிகளுக்கு திரும்புமாறு கோருவதாக கிளிநொச்சி வளாக பிரதிப் பதிவாளர் ஞானபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.