அபே ஜனபல கட்சி விவகாரம்- நீதிமன்ற தீர்ப்பை நாடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

அபே ஜனபல கட்சி விவகாரம்- நீதிமன்ற தீர்ப்பை நாடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான பிரச்சினை, நீதிமன்றம் ஊடாக தீர்ப்பதற்கு தேவை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் 3 உறுப்பினர்களும் இது தொடர்பில் மாறுப்பட்ட நிலைப்பாடுகளில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அபே ஜனபல கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்திருந்தது.

இந்தநிலையில் குறித்த ஆசனம் தொடர்பில் நெருக்கடி ஏற்பட்டதுடன் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் தற்போது காணாமல் போயுள்ளார்.

எனினும் அவர் காணாமல் போயுள்ள விடயம் தொடர்பில் அத்துரலியே ரத்தன தேரர் மீது சிலர் குற்றம்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எமது மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் சிலர் நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகியிருந்தனர்.