"குடு ரொசானின்” உதவியாளர் ஒருவர் வெல்லம்பிடிய பகுதியில் கைது

"குடு ரொசானின்” உதவியாளர் ஒருவர் வெல்லம்பிடிய பகுதியில் கைது

பொரலஸ்கமுவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து அண்மையில் கைது செய்யப்பட்ட பெண்ணின் 5 தனியார் வங்கி கணக்குகளில் 14 கோடியே 21 லட்சம் ரூபா பணம் பரிமாற்றப்பட்டுள்ளது.

காவல்துறையினர் முன்னெடுத்துள்ள விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இது தவிர குறித்த பெண்ணின் மகிழுந்தும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான பொடி லெசி என அறியப்படும் ஜனித் மதுசங்க டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

ஹெரோயின் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்ட நிதி சுமார் 51,000 ரூபா பணம், 5 கையடக்க தொலைபேசிகள், வங்கி கணக்கு புத்தகம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, திட்டமிடப்பட்ட குற்றங்களை புரியும் குழுவின் உறுப்பினரான குடு ரொசான் என அறியப்படும் பிரசாத் ருவண் குமாரவின் உதவியாளர் ஒருவர் வெல்லம்பிட்டியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைதானவரிடம் இருந்து 5 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட கொழும்பு 14 சேர்ந்த 4 பேர் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து 111 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், இரண்டு முச்சக்கர வண்டிகள், கையடக்க தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.