மாத்தளை மாவட்ட வாக்குகள் மீண்டும் எண்ணப்படுமா..?

மாத்தளை மாவட்ட வாக்குகள் மீண்டும் எண்ணப்படுமா..?

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்ட வாக்குகளை மீண்டும் கணக்கெடுத்தால் தமது கட்சியின் வாக்கு எண்ணிக்கையிலோ அல்லது தனக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையிலோ மாற்றங்கள் ஒருபோதும் ஏற்படாது என்றும் இதற்காக தனது அரசியல் வாழ்க்கையை பந்தயமாக வைக்க தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் செலுத்தப்பட்ட வாக்குகளை மீண்டும் கணக்கிட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அலுவிஹாரோ ரஞ்சித் ஜினதிஸ்ஸ விடுத்த வேண்டுகோள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மறு கணக்கெடுப்பின் போது தனது வாக்குகளின் எண்ணிக்கை மாறினாலோ, வெற்றியாளர்கள் தோல்வியடைந்தாலோ தான் ஒருபோதும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலைய பொறுப்பதிகாரி, வாக்கு எண்ணும் அதிகாரி, உதவி தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் அவரது உழியர்களுக்கு சரியான தேர்தல் முடிவுகளை வழங்க முடியாவிட்டால், தேர்தலில் போட்டியிடுவதில் எந்த பயனும் இல்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.