தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு சென்றவருக்கு கொரோனா தொற்று

புஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவு செய்த இலங்கை கடல் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனை ஊடாக கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதென காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் கே.சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த கடல் பாதுகாவலர் கடந்த பெப்ரவரி மாதம் மூன்றாவது வாரம் காலி முகத்திடலில் இருந்து டுபாய் னெ்றுள்ளார். அங்கு மிதக்கும் களஞ்சிய அறையில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 29அம் திகதி அவர் இலங்கைக்கு வந்துள்ளார். காலி துறைமுகம் ஊடாக இலங்கை வந்தவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.