கட்சிக்குள் வெடித்துள்ள தேசிய பட்டியல் விவகாரம்! சுரேன் ராகவன் பதில்
தனது தேசிய பட்டியல் விவகாரம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய அவசியமில்லையென முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
தேசியப் பட்டியலில் தெரிவு செய்யுமாறு நான் யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட குழுவே என்னை தேசியக் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்தது.
தேசிய பட்டியல் பரிந்துரையில் சுதந்திர கட்சியின் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் பெயரைப் புறக்கணித்து என்னை தெரிவு செய்தமை கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறான விடயமென அவர் தெரிவித்துள்ளார்.