முந்தளம் பகுதி மக்களின் செயற்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு

முந்தளம் பகுதி மக்களின் செயற்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு

முந்தளம்-மதுரங்குளி-தோடுவாவ வீதிக்கு இருபுறமும் உள்ள சதுப்பு நிலங்களில் வீட்டு குப்பைகளை கொட்டுவது பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மதுரங்குளிய நகரில் இருந்து தோடுவாவ வரையான பிரதான வீதிக்கு அருகே அமைந்துள்ள ஹெமில்டன் கால்வாய் கடந்த காலங்களில் முற்றிலும் மாசுபட்டு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.