புதிய நீதிமன்றம் உருவாகும், சட்டம் இயற்றப்படும் - நீதி அமைச்சர் எச்சரிக்கை
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சில விடயங்களை மறைத்து வைத்திருக்க முடியாது. பூப்போன்ற சிறுவர்களுக்கு அநீதி இழைக்கப்படுமாக இருந்தால் அதற்குரிய தண்டனையை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடும். அதற்கான சட்டங்களை இயற்ற முடியும் என எச்சரித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதியுடன் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.