ஸ்ரீலங்காவில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா!
ஸ்ரீலங்காவில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2951 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும், கென்யாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் துபாயில் இருந்து வந்த ஒருவருக்குமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.