சட்டவிரோத மணல் அகழ்வு: நால்வர் கைது

சட்டவிரோத மணல் அகழ்வு: நால்வர் கைது

கெகிராவ தம்புலு ஓயாவுக்கு அருகே சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இராணுவம் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இதன்போது மணல் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட நான்கு ட்ராக்டர்களும், மணலைக் கொட்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடம் பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் தம்புலு ஓயாவிலிருந்து மணல் கொண்டு செல்ல தயாராகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கெகிராவ மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.