குடம்புளி விவசாயிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை

குடம்புளி விவசாயிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை

தமது உற்பத்திக்கு சாதாரண விலையை பெற்றுக்கொடுக்குமாறு மாத்தளை மாவட்டத்தில் உள்ள குடம்புளி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடம்புளி பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இதற்கான நியாயமான விலை கிடைக்காமை காரணமாக குடம்புளி பயர்செய்கையை கைவிட வேண்டிய நிலையில் இருப்பதாக அங்குள்ள விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குடம்புளி கிலோ ஒன்றுக்காக தங்களுக்கு 100 தொடக்கம் 150 ரூபா வரையில் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ உலர்ந்த குடம்புளியை பெறுவதற்கு சுமார் 8 கிலோ வரையான மூல குடம்புளி தேவைப்படுவதாகவும் இதனால் தங்களுக்கு அதிகளவான செலவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இந்த பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தமக்கு நியாயமான விலையொன்றை பெற்றுக்கொடுக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்