மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 343 பேர் கைது

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 343 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைககளின் போது, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஹெரோயின் வைத்திருந்த 126 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, 84 பேர் கஞ்சா போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்ததாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐஸ் ரக போதைப்பொருட்களுடன் கைதான 12 பேரும் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.