உருளைக்கிழங்கு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்படும் வரியை அதிகரிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 55 ரூபாவாக அதிகரிப்பதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசேட பொருட்களுக்கான சட்டத்தின் கீழ் குறித்த வரி அதிகரிப்பானது நான்கு மாத காலத்திற்கு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய உருளைக்கிழங்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.