நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!
நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 09 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 798 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 132 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2941 ஆக காணப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா தொற்றால் எற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.