வெளிநாடுகளில் உள்ள 56,297 இலங்கையர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

வெளிநாடுகளில் உள்ள 56,297 இலங்கையர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

கொரோனா வைரஸ் பரவலையடுத்து வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நாடு திரும்புவதற்காக விருப்பம் வெளியிட்டிருந்த இலங்கையர் 23,723 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்னமும் 56,297 பேர் நாடு திரும்பக் காத்திருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டமைச்சு வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

இதுவரை இலங்கைக்கு மீள அழைத்துவரப்பட்டுள்ள 23,000ற்கு மேற்பட்டவர்கள் 93 நாடுகளிலிருந்து இங்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டமைச்சு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இலங்கைக்கு மீளத் திரும்புவதற்காக காத்திருக்கும் 56,000ற்கும் மேற்பட்டவர்களில் பலரும் கொவிட்-19 உலகளாவிய தொற்று நோய்காரணமாகவும் , தொழில் இழப்பு காரணமாகவும் வெளிநாடுகளில் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள வர்களாக தெரியவந்துள்ளது.