சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்துச் செய்யாதீர்கள்! சபையில் தேசிய மக்கள் சக்தி கோரிக்கை

சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்துச் செய்யாதீர்கள்! சபையில் தேசிய மக்கள் சக்தி கோரிக்கை

19வது திருத்தச்சட்டத்தில் குறைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் அதில் உள்ள சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்துச்செய்யவேண்டாம் என்று தேசிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த கோரிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஜனநாயகத்தை நிலைநாட்ட முக்கிய பங்கை ஆற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது 19வது திருத்தத்தில் உள்ள முற்போக்கான விடயமாகும். எனவே அதனை ரத்துச்செய்யவேண்டாம் என்று விஜித ஹேரத் கேட்டுக்கொண்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள்; 19வது அரசியலமைப்பின்கீழ் குறைக்கப்பட்டன.

இதன்மூலம் நாடாளுமன்றம் பலமிக்க சபையாக மாற்றப்பட்டது. எனினும் அது மீண்டும் மாற்றப்படுமானால் அதிகாரங்கள் மீண்டும் தனிஆள் ஒருவரிடம் செல்லும். அத்துடன் நாடாளுமன்றத்தின் அதிகாரமும் செயலிழந்துப்போகும் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

இதேவேளை கொண்டு வரப்படும் புதிய அரசியலமைப்பு, சாதாரண சமூகத்தின் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்துவதாக அமையவேண்டும் என்று அவர் கோரினார்.