வாக்கெடுப்பின்றி தெரிவு செய்யப்பட்ட புதிய சபாநாயகர்!

வாக்கெடுப்பின்றி தெரிவு செய்யப்பட்ட புதிய சபாநாயகர்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன 9 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் ஆரம்பத்தில் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார். இதனால் புதிய சபாநாயகர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.