சிறையில் மர்மமாக உயிரிழந்த கைதியால் ஏற்பட்டுள்ள குழப்பம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து இன்று மினுவங்கொட நீதவான் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
இந்த கைதி நேற்றிரவு உயிரிழந்துள்ளதுடன் அவர் இறந்தமைக்கான காரணம் தெரியவரவில்லை.
மரதஹமுல பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிட முயற்சித்த போது இந்த சந்தேக நபர் உட்பட இரண்டு பேரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தகவல்களை முன்வைத்த நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள், முதலாவது சந்தேக நபர் சிறையில் இருக்கும் போது உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இதனையடுத்து வழக்கின் இரண்டாவது சந்தேக நபரை 2 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனைகள் இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடைபெறவுள்ளன.