கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நேற்றைய தினத்தில் 4 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பியவருக்கும் கொவிட்19 தொற்றுறதியாகியுள்ளது.
அத்துடன் துருக்கியில் இருந்து நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கும் கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 890 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 8 பேர் நேற்று குணமடைந்து, வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், 213 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.