முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகர்களாக விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி நியமனம்

முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகர்களாக விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி நியமனம்

முதலமைச்சர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவி ஏற்ற நாளில் இருந்து தினமும் தலைமைச் செயலகம் வந்து பணியாற்றி வருகிறார்.

ஒவ்வொரு துறை வாரியாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்கிறார். எந்தெந்த துறைகளுக்கு யார்-யாரை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று ஆலோசித்து முடிவெடுக்கிறார். 

அதன் அடிப்படையில் முக்கியமான பொறுப்புகளுக்கு திறமையான அதிகாரிகளை நியமித்து வருகிறார்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தனது சிறப்பு ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய 2 பேரை நியமனம் செய்துள்ளார்.

இதில் ஜான் ஆரோக்கிய சாமி அரசியல் வியூக நிபுணர் ஆவார். தமிழக வெற்றிக்கழகம்தான் ஆட்சியை பிடிக்கும் என்று முன் கூட்டியே கணித்து சொன்னவர். இவரை அரசியல் ரீதியான விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமித்துள்ளார்.

இதே போல் இன்னொரு ஆலோசகரான விஷ்ணு ரெட்டி மற்ற விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன்பு ஜோதிடர் ரத்தன் பண்டிட் என்பவர் முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்க்கட்சியினரால் விமர்சனம் செய்யப்பட்டதால் அவரது நியமனம் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் இப்போது ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோரை சிறப்பு ஆலோசகர்களாக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்துள்ளார்.