மன்னார் கடற்படையினரிடம் சிக்கிய வெளிநாட்டு நபர்!

மன்னார் கடற்படையினரிடம் சிக்கிய வெளிநாட்டு நபர்!

தலைமன்னார் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் காலாவதியான விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஷ்யபிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தலைமன்னார் கடற்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதனையடுத்து மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி கயஸ் பெல்டானோ முன்னிலையில் நேற்றைய தினம் முன்னிலைப்புடுத்தப்பட்டிருந்தார். சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி டிணேஸன் முன்னிலையாகியிருந்தார்.

அதன் போது குறித்த நபரை சிறையில் அடைக்க உத்தரவு இட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இரத்த மாதிரி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தலைமன்னார் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கான P.C.R பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற பின்னர் குறித்த நபர் சிறையில் அடைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.