கந்தகாடு மற்றும் சேனபுர பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்..!

கந்தகாடு மற்றும் சேனபுர பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்..!

கந்தக்காடு மற்றும் சேனபுர ஆகிய போதைப்பொருள் புனர்வாழ்வளிப்பு மத்திய நிலையங்களுடன் தொடர்புடையவர்களின் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 629 ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட் 19 தடுப்புக்கான மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் சேனபுர போதைப்பொருள் புனர்வாளிப்பு மத்திய நிலையத்தில் இருந்து 23 கொவிட்19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து கந்தக்காடு மற்றும் சேனபுர ஆகிய போதைப்பொருள் புனர்வாழ்வளிப்பு மத்திய நிலையங்களுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறதியானவர்களின் எண்ணிக்கை 629 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 காரணமாக தோஹாரில் சிக்கியிருந்து 42 மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்புக்கான மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட வெலிக்கடை சிறைக் கைதிக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதன் காரணமாக வெளியார் சிறைக்கூடத்திற்கு பிரவேசிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

சிறைக்கைதிகளை பார்வையிட பிரவேசிப்பவர்கள் சுகாதார தரப்பினரால் வழங்கப்படும் ஆலோசனைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அந்த திணைக்களம் கோரியுள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,871 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 267 ஆக அதிகரித்துள்ளது.