பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து: கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, அதிமுக-வுடனான பாஜக-வின் கூட்டணியை விமர்சிக்கும்போது, ஆரம்பத்தில் பிரதமரை ஒரு பயங்கரவாதி என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், அக்கருத்தின் பின்னணியை விளக்குமாறு செய்தியாளர்கள் வற்புறுத்தி கேட்டபோது, பிரதமர் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையே அச்சுறுத்தி வருவதையே தாம் அவ்வாறு குறிப்பிட்டதாக காங்கிரஸ் தலைவர் கார்கெ விளக்கம் அளித்தார்.
இருப்பினும், அக்கருத்தின் பின்னணியை விளக்குமாறு செய்தியாளர்கள் வற்புறுத்தி கேட்டபோது, பிரதமர் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையே அச்சுறுத்தி வருவதையே தாம் அவ்வாறு குறிப்பிட்டதாக காங்கிரஸ் தலைவர் கார்கெ விளக்கம் அளித்தார்.
அவர் மக்களையும் அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்தி வருகிறார். அவர் ஒரு பயங்கரவாதி (என்ற நேரடிப் பொருளில்) என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அச்சுறுத்துதல் என்பது. அவர் தனது அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் தவறாகப் பயன்படுத்துகிறார். எதிர்க்கட்சிகளைத் துஷ்பிரயோகம் செய்து, அவதூறு பரப்பி வருகிறார் என்று விளக்கம் அளித்தார்.
ஆனால் மல்லிகார்ஜுன கார்கே பகிரங்க மன்னிப்பு கோரவோ அல்லது தனது கருத்தைத் திரும்பப் பெறவோ உத்தரவிட வேண்டும். அத்துடன், சட்டம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அவருக்குப் பொருத்தமான தேர்தல் பிரசாரக் கட்டுப்பாடுகளையோ அல்லது பிற சீர்திருத்த நடவடிக்கைகளையோ விதிக்க வேண்டும் என பாஜக நேற்று வலியுறுத்தியிருந்தார்.
இன்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் அடங்கிய பாஜக கட்சியின் பிரதிநிதிகள் குழு, இக்கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை சந்தித்து புகார் அளித்தனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கார்கேவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.