காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கையில் 67 பேர் கைது

காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கையில் 67 பேர் கைது

கிரேண்பாஸ் காவல்துறையை மையப்படுத்தி வட கொழும்பு காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பில் 125 காவற்துறை அதிகாரிகள் ஈடுப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 6 பேர் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த 61 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 67 பேரும் இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த 1997 மற்றும் 1917 ஆகிய இலக்கங்களுக்;கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.