வடக்கில் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - எச்சரிக்கும் சங்க தலைவர்

வடக்கில் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - எச்சரிக்கும் சங்க தலைவர்

தமிழர் பிரதேசத்தில் இனவிருத்தி குறைந்து செல்வதால் பல வரலாற்று பாடசாலைகள் மூடப்படும் அபாயம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

நேற்று உடுவில் மான்ஸ் மகா வித்தியாலத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தலைமுறையினர் ஆரோக்கியம் குறைந்தவர்களாக உருவெடுக்கின்றனர்.

அதனால் நம்பிக்கை இல்லா வாழ்க்கையை முன்னெடுப்பதுடன் தனது பரம்பரையை வலுவாக்க தவறுகின்றனர்.

வடக்கில் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் - எச்சரிக்கும் சங்க தலைவர் | Schools Closed In The North

போட்டிமிக்க சவால்மிக்க வாழ்கையை எளிதாக வெற்றி கொள்ள கற்றுத்தருவது விளையாட்டுப்போட்டி. அதனை பங்குபற்றுதல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

இருந்தபோதும் பல பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியாகவே காணப்படுகின்றது.

இருந்தபோதும் சில பாடசாலைகளில் அனுமதிபெறுவதற்கு தவம் கிடக்கும் பெற்றோர், அதற்காக எவ்வளவு விலைகொடுக்கவும் தயாராக உள்ளனர். இது மாறவேண்டும்.